உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிலத்தடி நீரை பாதுகாக்க ஆரணி ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க கோரிக்கை

நிலத்தடி நீரை பாதுகாக்க ஆரணி ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க கோரிக்கை

பொன்னேரி:பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் - ஆலாடு கிராமங்களுக்கு இடையே, ஆரணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. மழைக்காலங்களில் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும் மழைநீர் பெரும்பேடு, காட்டூர், தத்தமஞ்சி, வேலுார் ஏரிகளுக்கு கொண்டு சென்று சேமித்து வைக்கப்படுகிறது.அணைக்கட்டு பகுதியில், ஆழ்துளை மோட்டார்கள் அமைத்து, சிவபுரம், மனோபுரம், ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.கோடை வெயிலின் தாக்கத்தால், அணைக்கட்டில் தேங்கிய தண்ணீர் படிப்படியாக குறைந்து வருகிறது. அடுத்த சில தினங்களில் ஆறு வறண்டுவிடும் நிலை உள்ளது.ஆற்றில் தேங்கும் தண்ணீர்தான் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் ஆற்றுப்பகுதியில் சீரான இடைவெளியில் ஆழ்துளை கிணறுகளை அமைத்திட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து சின்னகாவணம் கிராமத்தை சேர்ந்த விவசாயி எல். தாரகராமன் கூறியதாவது:ஆற்றின் மேல் பகுதியில் மணல் இல்லை. அவை முழுதும் வெட்டி எடுக்கப்பட்டு விட்டது. இதனால் மழைநீர் மண்ணில் உறிஞ்சப்படுவதில்லை. ஆற்றில் தேங்கும் தண்ணீர் நிலத்தடிநீராகவும் மாறுவதில்லை. மேற்பரப்பிலேயே நின்று, கோடையில் ஆவியாகி விடுகிறது.நிலத்தடி நீரை பாதுகாக்கவும், குடிநீரின் சுவை மாறாமலும் இருக்க வேண்டுமானால், ஆற்றில் தேக்கி வைக்கப்படும் மழைநீர் மண்ணின் கீழ் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்காக ஆற்றில், 100 மீ. இடைவெளியில், 30 - 40 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும். அப்போது ஆற்றில் தேங்கும் மழைநீர், மண்ணின் அடிப்பகுதிக்கு சென்று நிலத்தடி நீராக மாறும். அதற்கான விரிவான ஆய்வுப்பணிகளை நீர்வளத்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி