உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போளிவாக்கத்தில் குடிநீர் தொட்டி இடிப்பு

போளிவாக்கத்தில் குடிநீர் தொட்டி இடிப்பு

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் போளிவாக்கம் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இந்த தொட்டி கடந்த 2013ம் ஆண்டு, 32,500 ரூபாய் மதிப்பீட்டில் பழுது பார்க்கப்பட்டது. அதன்பின், 10ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித பராமரிப்பு பணியும் மேற்கொள்ளாததால், தொட்டியின் மேற்பகுதியில் ஆங்காங்கே சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, அதன் உறுதித் தன்மையை இழந்து வந்தது. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து அதற்கான பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ