| ADDED : ஆக 13, 2024 09:12 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், வட கிழக்கு பருவ மழை காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை குறித்த கலந்தாலோசனை கூட்டம் நேற்று நடந்தது.கலெக்டர் பிரபுசங்கர்தலைமை வகித்து, அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்.கலெக்டர் கூறிய தாவது: வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்பு களான மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சி துறையினர் கண்காணிக்க வேண்டும்.டெங்கு மற்றும்காய்ச்சல் பரவாமல் இருக்க உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் முகாம் அமைத்து தடுப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு தோறும் சென்று காய்ச்சல் உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வீடுகளைச் சுற்றிஇருக்கும் பிளாஸ்டிக் கழிவு, பயன்படுத்தப்படாத ஆட்டு உரல், பழைய டயர் ஆகியவற்றை அப்புறப் படுத்த வேண்டும்.காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி மருத்துவர் கூறும் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.கூட்டத்தில் ஆவடி மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட சுகாதார அலுவலர்கள் பிரியாராஜ் - திருவள்ளூர், பிரபாகரன்- பூந்தமல்லி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.