உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளி மாணவர்களுக்கு பல் பரிசோதனை முகாம்

பள்ளி மாணவர்களுக்கு பல் பரிசோதனை முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட டி.ஆர்.பி.சி.சி.சி., மேல்நிலைப் பள்ளியில் நேற்று பொது சுகாதார துறை சார்பில் 249 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியருக்கு சிறப்பு பல் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் துவக்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 249 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியருக்கு சிறப்பு பல் மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில், 249 மாணவ - மாணவியருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.முகாமில், பல் ஆரோக்கியம் மற்றும் பல் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, பல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் உதவி திட்ட மேலாளர் மருத்துவர் ராஜேஷ்குமார், மருத்துவ அலுவலர் சுபாஷ் சந்திரபோஸ், திருவள்ளுர் நகராட்சி கமிஷனர் திருநாவுகரசு, சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ