உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தொடுகாடு ஊராட்சி தலைவருக்கு ஊரக வளர்ச்சி துறை நோட்டீஸ்

தொடுகாடு ஊராட்சி தலைவருக்கு ஊரக வளர்ச்சி துறை நோட்டீஸ்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் தொடுகாடு ஊராட்சி தலைவர் வெங்கடேசன், 45. இவர் மீது பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்தன. 2023 - 24 நிதியாண்டு வரையிலான அனைத்து ஆவணங்களை ஒன்றிய அலுவலகத்தில் சமர்ப்பிக்கவில்லை. தொழிற்சாலைகளில் முறையான வரி வசூல் செய்யப்படவில்லை. மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாக கவனத்திற்கு வந்தது. இதையடுத்து ஊரக வளர்ச்சித் துறையினர் விசாரணை நடத்தினர்.விசாரணையில் இவர் பல்வேறு வரி இனங்களை ஊராட்சிக்கு முறையாக வசூல் செய்யாமல் இருந்துள்ளது தெரிந்தது.இதையடுத்து ஊராட்சி தலைவரை தகுதி நீக்கம் செய்வது குறித்து எச்சரிக்கை கடிதம் வழங்க முயன்றனர். தலைவர் வெங்கடேசன் கடிதத்தை வாங்க மறுக்கவே ஊராட்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நோட்டீஸ் ஒட்டினர். இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி தலைவர், ஊராட்சி அலுவலகத்தை கடந்த மூன்று நாட்களாக பூட்டு போட்டு பூட்டியுள்ளார். இதனால் அப்பகுதிவாசிகள் அடிப்படை வசதிகளுக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ