உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆதிபராசக்தி கோவிலில் தீமிதி விழா

ஆதிபராசக்தி கோவிலில் தீமிதி விழா

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு ஊராட்சி காந்திப்பேட்டையில் உள்ள மேட்டுக்கடை பகுதியில் ஆதிபராசக்தி அம்மன் கோவில் உள்ளது.இங்கு, 29ம் ஆண்டு கூழ்வார்த்தல் மற்றும் முதலாமாண்டு தீமிதி திருவிழா, கடந்த 19ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த 26ம் தேதி காலை கூழ்வார்த்தலும், பூங்கரகம் எடுத்தலும் நடந்தது. நேற்று முன்தினம் காலை வேப்பிலை கரகமும், காலை 10:45 மணிக்கு யாகம் வளர்த்தலும் நடந்தது. இரவு 7:00 மணி முதல் காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள், பூக்குழியில் இறங்குதலும் நடந்தது. தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை