உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வடகரை ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவர் சேர்க்கை

வடகரை ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவர் சேர்க்கை

திருவள்ளூர்:வடகரை ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவர் சேர்க்கை, வரும் 15ம் தேதி வரை நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:வடகரை ஆதிதிராவிடர் நல அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், தொழிற்கல்வி பெறுவதற்காக, நேரடி மாணவர் சேர்க்கை, கடந்த 1ல் துவங்கி வரும் 15ம் தேதி வரை நடக்கிறது.கல்வி தகுதி, பொருத்துநர், மின்சார பணியாளர், கம்மியர் மோட்டார் வாகனம் ஆகிய பிரிவுகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும், வெல்டர், ஒயர்மேன் பிரிவுக்கு, எட்டாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.ஆண்களுக்கு வயது வரம்பு 14 - 40. பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. விண்ணப்ப கட்டணம் 50 ரூபாய். பயிற்சி கட்டணம் இல்லை.பயிற்சியில் சேர்வோருக்கு, மாதம் 750 உதவித்தொகை, உணவுடன் கூடிய தங்கும் வசதி, புத்தகம், சீருடை, இலவச பேருந்து பயண அட்டை மற்றும் அரசின் அனைத்து சலுகைகள் வழங்கப்படும்.தகுதி உள்ளோர், முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (ஆதிதிராவிடர் நலத்துறை), வடகரை, செங்குன்றம், சென்னை - 52 என்ற முகவரியில் அசல் சான்றுடன் அணுகலாம்.மேலும் தகவல் பெற, 044- - 2989 6032 மற்றும் 94440 09046, 94990 55670, 99407 26276 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி