மேலும் செய்திகள்
'மாஜி' விளையாட்டு வீரர் ஓய்வூதியம் பெற அழைப்பு
02-Sep-2024
திருவள்ளூர்: நலிந்த நிலையிலுள்ள முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:விளையாட்டு துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது.திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், இத்திட்டத்தின் கீழ் www.sdat.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.நடப்பு ஆண்டு, 58 வயது பூர்த்தியடைந்தோர், வரும் 30 வரை இணையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை 74017 03482 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
02-Sep-2024