மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
5 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
6 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
6 hour(s) ago
திருவள்ளூர்:திருமழிசை பேரூராட்சியில், கடந்த 2022ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 1, 6, 7, 13, 14, 15 என, ஆறு வார்டுகளை அ.தி.மு.க.,வும், 3, 4, 5, 8, 10, 12 ஆகிய ஆறு வார்டுகளை தி.மு.க.,வும் கைப்பற்றின.இரண்டாவது வார்டை ம.தி.மு.க.,வும், ஒன்பதாவது வார்டை பா.ம.க.,வும் கைப்பற்றியது. 11வது வார்டை சுயேச்சையும் கைப்பற்றினர்.இதில், தி.மு.க., கூட்டணி ஏழு இடங்களையும், அ.தி.மு.க., ஆறு இடங்களையும் அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து தனித்து போட்டியிட்ட பா.ம.க., ஒரு வார்டையும், சுயேச்சையாக 11வது வார்டில் போட்டியிட்டவர் வெற்றி பெற்று பா.ஜ.,வில் இணைந்தார்.இந்நிலையில், அ.தி.மு.க.,வில் சுயேச்சையாக போட்டியிட்டவரும், பா.ம.க.,வும் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. இதையடுத்து அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஏழாவது வார்டு உறுப்பினர் ரமேஷ் தலைவராகவும், பா.ம.க. வார்டு உறுப்பினர் ராஜேஷ் துணை தலைவராகவும் தகவல்கள் கசிந்தது.அதேபோல், தி.மு.க., தரப்பில் தலைவர் பதவிக்கு எட்டாவது வார்டு உறுப்பினர்கள் மகாதேவன் மற்றும் நான்காவது வார்டு உறுப்பினர் வடிவேல் ஆகியோரிடையே ஏற்பட்ட கடும் போட்டியில், வடிவேல் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக தலைமை அறிவித்தது.இதில், தி.மு.க.,வைச் சேர்ந்த வடிவேல் தலைவராகவும், மகாதேவன் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த மே மாதம் தி.மு.க., பேரூராட்சி தலைவர் வடிவேல் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, துணை தலைவர் மகாதேவன் பொறுப்பு தலைவராக பதவி வகித்து வருகிறார். ஆக., 6ம் தேதி தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதனால், தலைவர் பதவிக்கு தி.மு.க., - அ.தி.மு.க,வினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள், தலா ஆறு வார்டுகளுடன் சரிசமமாக உள்ள நிலையில், வரும் 6ம் தேதி நடைபெற உள்ள தலைவர் பதவிக்கான தேர்தலில், பா.ம.க., பா.ஜ.க., ஆதரவு அளிக்கும் கட்சியே தலைவர் பதவியை கைப்பற்றும் என்பதால், திருமழிசையில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.'கூட்டணியே வேண்டாம்; தனித்து போட்டியிடுவோம்' என, தி.மு.க., - அ.தி.மு.க., தலைமை கூறி வரும் நிலையில், பேரூராட்சி தலைவர் பதவிக்கே ஆதரவு இருந்தால் தான் ஜெயிக்க முடியும் என, இரு கட்சியினரும் தவித்து வருகின்றனர்.
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago