உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாட்ஸாப்பில் கொலை மிரட்டல் உதவி கமிஷனரிடம் தி.மு.க., பிரமுகர் புகார்

வாட்ஸாப்பில் கொலை மிரட்டல் உதவி கமிஷனரிடம் தி.மு.க., பிரமுகர் புகார்

மதுரவாயல்:தன்னை கொலை செய்யப்போவதாக,'வாட்ஸாப்' வாயிலாக கொலை மிரட்டல் வந்துள்ளது குறித்து, மயிலாடுதுறை தி.மு.க., சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் புகார் அளித்துள்ளார்.வளசரவாக்கம், ஸ்ரீ கிருஷ்ணா நகர், 27வது தெருவைச் சேர்ந்தவர் அகமது ஷவலியுல்லாஹ், 35; மயிலாடுதுறை தி.மு.க., சிறுபான்மை அணி துணை அமைப்பாளர்.'கார்மென்ட்' தொழில் செய்து வரும் இவர், விருகம்பாக்கம் உதவி கமிஷனரிடம், நேற்று முன்தினம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.புகாரில் அகமது ஷவலியுல்லாஹ் கூறியுள்ளதாவது:நான் தி.மு.க., சிறுபான்மை அணி துணை அமைப்பாளராக சிறப்பாக செயல்பட்டு வருவதால், கட்சியில் சிலர் என் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.மயிலாடுதுறை சுப்ரமணியபுரம் தாகூர் நகரிலுள்ள என் கட்சி அலுவலகத்தில், பெட்ரோல் குண்டு வீசி தாக்கப் போவதாக, 'வாட்ஸாப்'பில் நேற்று குறுஞ்செய்தி வந்தது.அந்த குறுஞ்செய்தியில், தகாத வார்த்தைகளால் என்னை திட்டியதுடன், சமீபத்தில் நடந்த ஆம்ஸ்ட்ராங் கொலை போல், எனக்கும் நடக்கும் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.அத்துடன், சென்னை கொடுங்கையூரில் உள்ள என் வீட்டில் வசிக்கும் பெற்றோர் மற்றும் தம்பி, தங்கை ஆகியோர் குடும்பத்தையும், மர்ம நபர்கள் சென்று மிரட்டி வருகின்றனர். என்னுடன், 10 ஆண்டுகளாக பழகி வந்த சென்னையைச் சேர்ந்த முகமது அலி என்பவர், என் வளர்ச்சியை பிடிக்காமல், பணம் கேட்டு பிரச்னை செய்து வந்தார்.நானும் அவ்வப்போது பண உதவி செய்தேன். அவர் நடவடிக்கை பிடிக்காததால், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அவரிடமிருந்து விலகினேன்.இந்நிலையில் முகமது அலி, அவரது அக்கா பானு, அவரது தம்பி யூசுப் ஆகியோர், பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். பணம் தராவிட்டால், என் குடும்பத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டினர்.அடியாட்களை வைத்து, கொலை மிரட்டல் விடுத்தனர்.கட்சி அலுவலகத்திற்கும், வீட்டிற்கும், கொடுங்கையூரில் உள்ள குடும்பத்தினரையும் மிரட்டும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறியுள்ளார்.இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ