உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஜெ.ஜெ.கார்டனில் பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டிகள்

ஜெ.ஜெ.கார்டனில் பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டிகள்

திருவள்ளூர்,:திருவள்ளூர் வட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவானுார் கண்டிகை கிராமத்தில், ஜெ.ஜெ.கார்டன் குடியிருப்பு பகுதி உள்ளது. திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில், ஐ.சி.எம்.ஆர்., அருகில் அமைந்துள்ள இந்த நகரில், 150க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி குடிபெயர்ந்துள்ளனர். மேலும், பல வீடுகள் புதிதாக இங்கு கட்டப்பட்டு வருகின்றன.சிறுவானுார் கண்டிகை ஊராட்சிக்கு உட்பட்ட இந்த நகரில், அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. இந்த நகரில், கடந்த, 2020-21ல் ஜல்ஜீவன் திட்டத்தில், 14.80 லட்சம் ரூபாய் மதிப்பில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. தற்போது இந்த தொட்டியில் நீர் நிரப்பாமலும், வீட்டிற்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்காததாலும், தற்போது இநத்த மேல்நிலை தொட்டி சேதமடைந்துள்ளது. இரண்டு இடத்தில் குடிநீர் தொட்டி அமைத்தும், இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. கோடை காலத்தில், குடிநீர் கிடைக்காமல், தண்ணீர் கேன்களை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே, ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாக அதிகாரிகள், ஜெ.ஜெ.கார்டனில் போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு, மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்