உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வெள்ளியூரில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

வெள்ளியூரில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட, 27 வார்டுகளில், 450க்கும் மேற்பட்ட தெருக்களில், 16,985 வீடுகளில், 56 பேர் வசித்து வருகின்றனர்.நகராட்சி முழுதும், 5,535 வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. வீட்டு இணைப்பு இல்லாத மக்களுக்கு, 8,000த்திற்கும் மேற்பட்ட தெரு குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.நகராட்சியில், வீட்டு குழாய் மற்றும் தெரு குழாய் மூலம், தினமும், 50 லட்சம் லிட்டர் அளவு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதற்காக, பட்டரைபெரும்புதுார், புங்கத்துார் உள்பட, 13 இடங்களீல், ஆழ்துளை குழாய் கிணறு அமைத்து, தினமும், 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. கடந்த, 2004ல் வெள்ளியூரில் இருந்து, கொற்றலை ஆற்றின் கரையோரம், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, குடிநீர் எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இங்கிருந்து, தினமும், 35 லட்சம் லிட்டர் அளவிற்கு குடிநீர் எடுக்கப்பட்டு, திருவள்ளூர் நகராட்சிக்கு வினியோகிக்கப்பட்டு வந்தது.இவ்வாறு பெறப்படும் குடிநீர், நகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட, 13 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சேகரித்து, தெரு குழாய்கள், வீட்டு இணைப்பு குழாய்கள் மூலம், தினமும், 50 லட்சம் லிட்டர் அளவிற்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.தற்போது வெள்ளியூரில் இருந்து திருவள்ளூர் வரும் குடிநீர் குழாய் ஈக்காடு கிருஷ்ணா கால்வாய் மேல் அமைக்கப்பட்ட இரும்பு குழாயில் உடைப்பு காரணமாக, தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. உடைப்பு ஏற்பட்ட குழாயை சீரமைத்து விரயமாகும் குடிநீரை தடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி