உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புழுதி பறக்கும் சாலையால் தவிப்பு குடியிருப்புவாசிகள் சாலை மறியல்

புழுதி பறக்கும் சாலையால் தவிப்பு குடியிருப்புவாசிகள் சாலை மறியல்

மீஞ்சூர்:மீஞ்சூர் --- வல்லுார் இடையேயான மாநில நெடுஞ்சாலை வழியாக, தினமும், 20,000 கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.தொடர் வாகன போக்குவரத்து உள்ள இந்த சாலை, கடந்த, இரண்டு ஆண்டுகளாக சேதம் அடைந்து உள்ளது.சாலை முழுதும் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. அதில் அவ்வப்போது நெடுஞ்சாலைத்துறையினர் கொட்டும் சரளை கற்களால், கடும் புழுதி ஏற்படுகிறது.மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலை சந்திப்பில் தொடங்கி, பி.டி.ஓ. அலுவலகம், ரமணா நகர், புங்கம்பேடு, பட்டமந்திரி, வல்லுார் வரை, 2 கி.மீ., தொலைவிற்கு சாலை, புழுதிகாடாக இருக்கிறது. புழுதி பறக்கும் சாலையில் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.சாலையின் இருபுறமும், 250 கடைகள், நான்கு தனியார் பள்ளிகள், தனியார் மருத்துவமனை, 300க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.நாள்முழுதும் சாலையில் இருந்து வெளியேறும் புழுதியால் வியாபாரிகள், குடியிருப்புவாசிகள், பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.வியாபாரிகள், குடியிருப்புவாசிகள் புழுதியை சுவாசிப்பதால், இருமல், தும்மல், சுவாசக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டு தவிக்கின்றனர்.கடந்த, டிசம்பர் மாதம் வியாபாரிகள், குடியிருப்புவாசிகள், வாகன ஓட்டிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மழைக்காலம் முடிந்தபின், சாலையை சீரமைத்து தருவதாக உறுதியளிக்கப்பட்டது.இதற்காக, 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் தொடங்கப்பட்டன. சாலை சீரமைப்பு பணிகள் மந்தகதியில் நடப்பதால், ஆறு மாதங்களாகியும், ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது.இதனால், தினமும் குடியிருப்புவாசிகள், வியாபாரிகள் சிரமம் தொடர்கிறது. கொதிப்படைந்த குடியிருப்புவாசிகள் நேற்று பட்டமந்திரி பகுதியில், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் மீஞ்சூர் -வல்லுார் சாலை போக்குவரத்து ஸ்தம்பித்தது. 2 கி.மீ., தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர், காவல் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.சாலைப்பணிகளை துரிதமாக மேற்கொள்வதாக உறுதியளிக்கப்பட்டது. அதைதொடர்ந்து, குடியிருப்புவாசிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால், மூன்று மணிநேரம் மீஞ்சூர் - வல்லுார் சாலையில், கடும் போக்குவரத்து பாதித்தது.சவுடு மணல் லாரிகளால் அவதிதிருவள்ளூர் அடுத்த கைவண்டூர் பகுதியில், ஏரியிலிருந்து நெடுஞ்சாலை பணிகளுக்கு சவுடு மணல் எடுப்பது அரசு அனுமதியுடன் நடந்து வருகிறது. இந்த லாரிகள் கைவண்டூர் ஏரியிலிருந்து விடையூர் - திருப்பாச்சூர் சாலையில் வந்து பின் திருப்பாச்சூர் வழியாக திருவள்ளூர் செல்கின்றன.சில நேரங்களில் செங்கல் சூளைகளுக்கும் சவுடு மணல் லாரிகள் செல்கின்றன. இவ்வாறு சவுடு மணல் கொண்டு செல்லப்படும் லாரிகள், தார்ப்பாய் போடால் செல்வதால், இந்த நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் சவுடு மணல் கொண்டு செல்லும் லாரிகளை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை