| ADDED : ஜூலை 03, 2024 09:29 PM
திருவள்ளூர்:பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு, பொருளாதார மேம்பாட்டு கடன் வழங்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த தனிநபர் மற்றும் குழுவினர் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறு தொழில் மற்றும் வியாபாரம் செய்ய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வாயிலாக கடன் உதவி வழங்கி வருகிறது.குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு 18 - 60. ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.தனிநபருக்கு அதிகபட்சம், 15 லட்சம், குழுக் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு உறுப்பினருக்கு 1.25 லட்சம் மற்றும் குழு ஒன்றுக்கு 15 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.மேலும், www.tabcedco.tn.gov.inஎன்ற இணையத்திலும் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை, உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம் அல்லது மாவட்ட கூட்டுறவு வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.