| ADDED : மே 23, 2024 11:51 PM
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஜே.என்.சாலையில் இயங்கி வருகிறது. இங்கு, தினமும் 3,000த்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.இங்கு, திருவள்ளூர் சட்டசபை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, 30 லட்சம் ரூபாய் மதிப்பில் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டு உள்ளது.இந்த பேருந்து நிறுத்தம் நடுவில், இடையூறாக மின்கம்பம் உள்ளது. இதனால், பேருந்தில் பயணம் செய்வோருக்கு இடையூறு ஏற்படும் நிலை உள்ளது.மேலும், தற்போது தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ளதால், பேருந்து நிறுத்தம் திறப்பதும் தாமதமாகும் நிலை உள்ளது.எனவே, பேருந்து நிறுத்தம் திறப்பதற்குள், இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.