| ADDED : மே 30, 2024 12:32 AM
திருவள்ளூர்:கடம்பத்துார் ஒன்றியம் தொடுகாடு ஊராட்சி தலைவர் வெங்கடேசன், 45. இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2023 - 24ம் ஆண்டு நிதியாண்டு வரையிலான அனைத்து ஆவணங்களையும் ஒன்றிய அலுவலகத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றும், தொழிற்சாலைகளில் முறையான வரி வசூல் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்து ஊரக வளர்ச்சித் துறையினர் விசாரணை நடத்தினர். ஊராட்சி தலைவரை தகுதிநீக்கம் செய்வது மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 'நோட்டீஸ்' ஒட்டினர். இந்த நிலையில், ஊராட்சி தவைர் வெங்கடேசன் கூறியதாவது: சென்னை உயர் நீதிமன்றத்தில் டபிள்யூ.பி., 18493/2023 என்ற தீர்ப்பில், வரி வசூல் செய்யாத மாவட்ட நிர்வாகத்திற்கு வரி வசூல் அலுவலர்களை நியமிக்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.மேலும், உயர் நீதிமன்ற உத்தரவை திருவள்ளூர் கலெக்டர் நடைமுறைப்படுத்தவில்லை என, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், சில அதிகாரிகள் என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயன்றுள்ளனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.