| ADDED : ஜூலை 18, 2024 03:17 PM
திருவள்ளூர்:அம்பத்துார் அரசின் தொழிற்பயிற்சி நிலையத்தில், நேரடி மாணவர் சேர்க்கை வரும் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 ம் ஆண்டு அனைத்து தொழிற் பிரிவுகளில் மீதமுள்ள காலி இருக்கைகளை நிரப்புவதற்கான நேரடிச் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் தங்கள் சேர்க்கை விண்ணப்பத்தை அம்பத்துார் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பித்து பயிற்சியில் சேரலாம். நேரில் வரும் விண்ணப்பதாரர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்---5 ஆகியவற்றை எடுத்து வரவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.