உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தொழிற்சாலையில் தீ விபத்து ரூ. 20 லட்சம் பொருட்கள் நாசம்

தொழிற்சாலையில் தீ விபத்து ரூ. 20 லட்சம் பொருட்கள் நாசம்

பாண்டூர்:திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் கிரிவேன் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டன், 60. இவர் தோமூர் கிராமத்தில் கணபதி என்பவருக்கு சொந்தமான குடோனில் பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் தொழிற்சாலையை ஓராண்டாக நடத்தி வருகிறார்.கடந்த ஒருமாதமாக பணிக்கு ஆட்கள் வராததால் தொழிற்சாலை மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 7:30 மணியளவில் திடீரென குடோனில் தீ பிடித்தது.இதில் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் இயந்திரம், பொருட்கள் எரிந்து நாசமானது. சம்பவம் குறித்து திருத்தணி மற்றும் திருவள்ளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீரர்கள் தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை