| ADDED : ஆக 16, 2024 12:21 AM
பொன்னேரி:ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடந்த பேரணியில், 20க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பங்கேற்றன.இந்த பேரணி, பொன்னேரி திருவாயற்பாடியில் துவங்கி, தேரடி, ஹரிஹரன் பஜார், செங்குன்றம் சாலை வழியாக சென்று கிருஷ்ணாபுரத்தில் முடிந்தது. இதுகுறித்து, ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களை ஒடுக்குவதையும், அச்சறுத்துவதையே அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளது. அதை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் உற்பத்தி பொருளுக்கு லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும். கடன் வசூலிப்பில் குண்டர்களை வைத்து விவசாயிகளை அச்சுறுத்துவதை ஏற்க மாட்டோம்.விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை அடிப்படை நோக்கம் கொண்ட, மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டம் உதய் மின் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.