உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிதி நிறுவன ஊழியர் ஆபாச பேச்சு பெண் தற்கொலை முயற்சி

நிதி நிறுவன ஊழியர் ஆபாச பேச்சு பெண் தற்கொலை முயற்சி

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் வேப்பஞ்செட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி, 54. இவர், 'ஸ்ரீராம் பைனான்ஸ்' என்ற நிதி நிறுவனம் வாயிலாக, புதிதாக 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனத்தை தவணை முறையில் வாங்கினார். கடந்த 12 மாதங்களாக தவணை தொகையை சரியான நேரத்தில் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த மாத தவணை செலுத்த, 19 நாட்களாக காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதையடுத்து, தனியார் நிதி நிறுவன ஊழியர்களான வினோத் மற்றும் மற்றொரு ஊழியர், கடந்த 25ம் தேதி மணியின் வீட்டிற்கு வந்து அவரது மனைவி நிர்மலா, 45, என்பவரிடம் தவணை தொகை கேட்டு ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த நிர்மலா, வீட்டில் விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தார். உறவினர்கள் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து, நேற்று முன்தினம் மணி கொடுத்த புகாரின்படி, கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி