உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வெக்காளி அம்மன் கோவிலில் தீ மிதி விழா

வெக்காளி அம்மன் கோவிலில் தீ மிதி விழா

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் அருகே குமாரநாயக்கன்பேட்டை கிராமத்தில், பிரசித்தி பெற்ற வெக்காளி அம்மன் கோவில் உள்ளது. நேற்று, 19ம் ஆண்டு தீ மிதி திருவிழா நடந்தது. காலை, நவச்சண்டி ஹோமம், தொடர்ந்து வெக்காளி அம்மனுக்கு மகா கலசாபிஷேகம் நடந்தது. மாலை நடந்த தீ மிதி நிகழ்வின் போது, பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர். இரவு, சிம்ம வாகனத்தில் வெக்காளி அம்மன் திருவீதி உலா சென்று அருள்பாலித்தார். கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதி திருவிழாவில் பங்கேற்று வெக்காளி அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை