| ADDED : மே 05, 2024 10:58 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி நெடுஞ்சாலை மீடியன் பகுதியில் கொடிக்கம்பங்கள் மற்றும் சாலையோரம் பேனர் வைக்கப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது.குறிப்பாக அரசியல் விழாக்கள் மட்டுமல்லாது திருமணம், பிறந்த நாள் விழா, பாராட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்கள் வைப்பது தற்போது அதிகரித்து வருகிறது.இதற்கு காவல்துறை அதிகாரிகள் சரியான முறையில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நெடுஞ்சாலையோரம் பேனர் வைப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.எனவே, பேனர் வைப்பது மற்றும் கொடி கம்பங்கள் கட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.