உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குரூப் - 1 தேர்வுக்கு இலவச பயிற்சி

குரூப் - 1 தேர்வுக்கு இலவச பயிற்சி

திருவள்ளூர்: குரூப் - 1 முதல்நிலை தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-1 தேர்வுக்கு, 90 காலிபணியிட அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குரூப்-1 முதல்நிலை தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவுலகத்தில் நடத்தப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 97904 88034 என்ற தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம். இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள திருவள்ளுர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள், திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பங்கேற்று பயனடையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.l திருவள்ளூர் மாவட்டத்தில், வரும் 9ல் நடைபெறும் குரூப்-4 தேர்வில், 194 மையங்களில், 58,127 பேர் பங்கேற்கின்றனர்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், குரூப்-4 தேர்வுக்கான முன்னேற்பாடு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 வரும் 9ம் தேதி நடக்கிறது. இத்தேர்விற்கு திருவள்ளூர் மாவட்டத்தில் 58,127 பேர் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வு 194 மையங்களில் நடைபெற உள்ளது.தேர்வினை கண்காணிக்க துணை கலெக்டர் அளவிலான 9 நிலையான கண்காணிப்பு குழு, தாசில்தார் அளவிலான 9 பறக்கும் படை குழு மற்றும் 37 நடமாடும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.தேர்வு நடைபெறும் மையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், உதவி கலெக்டர்-பயிற்சி ஆயுஷ் குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ