உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

திருவள்ளூர், திருவள்ளூர் கற்குழாய் தெரு பகுதியில் நேற்று முன்தினம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், 42 என தெரிய வந்தது. மேலும் அவரிடம் விற்பனைக்கு இருந்த 120 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்