உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி கால்நடை விவசாயிகளுக்கு மானிய விலையில் புல் அறுக்கும் கருவி

திருத்தணி கால்நடை விவசாயிகளுக்கு மானிய விலையில் புல் அறுக்கும் கருவி

திருத்தணி,:திருத்தணி ஒன்றியத்தில் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு புல் அறுக்கும் கருவி, 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படுகிறது.திருத்தணி கால்நடை பராமரித்துறை உதவி இயக்குனர் தாமோதரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:புல் அறுக்கும் கருவின் விலை, 30 ஆயிரத்தி, 750 ரூபாயாகும். இதில் விவசாயிகளுக்கு மானிய தொகை, 15 ஆயிரத்தி, 375 ரூபாய் போக மீதமுள்ள தொகை செலுத்தினால் கருவி வழங்கப்படும். தேவைப்படும் விவசாயிகள் அந்த கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பம் கொடுத்து பெறலாம்.புல் அறுக்கும் கருவிகள் மூலம் புல் தண்டுகளை நறுக்கி மாடுகளுக்கு வழங்குவதால், உணவு செரிமானம் அதிகரிக்கும். ஊறுகாய் பொருட்கள் தயாரிக்கலாம். கால்நடை தீவனம் அளவு அதிகரிப்பதுடன், உணவு வீணாகாது. கால்நடைகள் உற்பத்தி அதிகரிக்கும் மற்றும் பசு மாடுகளுக்கு பால் உற்பத்தி அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை