| ADDED : ஆக 13, 2024 07:04 AM
சென்னை: தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில், ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டி சர்வதேச மாஸ்டராக அங்கீகாரம் கிடைப்பதற்காகவும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்றனர். பல கட்டங்களாக நடத்தப்படும் இப்போட்டியின் மூன்றாம் கட்டத்தில், ஐந்து இந்திய வீரர்கள், ஐந்து வெளிநாட்டு வீரர்கள் மோதினர். நேற்று இறுதிச்சுற்று நடந்தது.முடிவில், இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் ஹர்ஷத் 7.5 புள்ளிகள் பெற்று 'சாம்பியன்' பட்டத்தை தட்டிச் சென்றார்.அவரை தொடர்ந்து, 6 புள்ளிகளுடன் மங்கோலியாவின் உரிந்துயா ஊர்ட்சைக், 5.5 புள்ளிகளில் ரஷ்யாவின் அலெக்சாண்டர் ஆகியோர், முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை வென்றனர்.