உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாமூல் கேட்டு மிரட்டியவருக்கு சிறை

மாமூல் கேட்டு மிரட்டியவருக்கு சிறை

கடம்பத்துார்: கடம்பத்துார் அடுத்த ஏகாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பலராமன், 65. இவர், இப்பகுதியில் உள்ள சங்கர் என்பவரது கொய்யா மரத்தோப்பில், 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 26ம் தேதி கொய்யாத்தோப்பிற்கு வந்த ஏகாட்டூர் காமராஜபுரத்தைச் சேர்ந்த பூபாலன், 29, என்பவர், பலராமனிடம் மாமூல் கேட்டுள்ளார். மேலும், அவரிடமிருந்த 500 ரூபாயை பறித்துவிட்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்படி வழக்கு பதிந்த கடம்பத்துார் போலீசார், பூபாலனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ