மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
4 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
4 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
4 hour(s) ago
கும்மிடிப்பூண்டி:தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக, கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இந்த கல்வி ஆண்டுக்கான சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.குளிர்சாதன டெக்னீசியன், மெக்கானிக், சர்வேயர், இன்-பளான்ட் லாஜிஸ்டிக்ஸ் அசிஸ்ட்டன்ட் ஆகிய நான்கு தொழிற் பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகை மட்டுமின்றி மதிவண்டி, மடி கணினி, சீருடை, காலணிகள், பாட புத்தகங்கள், வரைபட உபகரணங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றுடன், மாற்று சான்று, ஆதார் அட்டை, ஜாதி சான்று, ஆறு புகைப்படங்களுடன் நேரடியாகவும், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரம் அறிய, 79041 59767, 88381 82450 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago