உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூட்டி கிடக்கும் கட்டண கழிப்பறை கடம்பத்துார் ரயில் பயணியர் அவதி

பூட்டி கிடக்கும் கட்டண கழிப்பறை கடம்பத்துார் ரயில் பயணியர் அவதி

கடம்பத்துார்:சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் திருவள்ளூர் அடுத்துள்ளது கடம்பத்துார் ரயில் நிலையம்.இந்த ரயில் நிலையத்தை கடம்பத்துார், கசவநல்லாத்துார், அகரம், புதுமாவிலங்கை, பேரம்பாக்கம், மப்பேடு, கீழச்சேரி, பிரையாங்குப்பம் உட்பட 40க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த ரயில் நிலையத்தில், தேவையான அடிப்படை வசதியான கழிப்பறை வசதி இல்லாததால், பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தில், நிலைய மேலாளர் அறை அருகே, ஒன்றாவது நடைமேடையில் கட்டண கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கழிப்பறை பயன்பாட்டிற்கு வராமல், எப்போதும் பூட்டியே கிடக்கிறது. இதே போல், ரயில் நிலைய நுழைவு பகுதியில் உள்ள கட்டண கழிப்பறையும் பயன்பாடில்லாமல் பூட்டியே கிடப்பதால், குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. பயணியரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, ரயில்வே நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, கடம்பத்துார் ரயில் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறை, பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை