உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வயலுார் கோவில்களில் வரும் 7ல் கும்பாபிஷேகம்

வயலுார் கோவில்களில் வரும் 7ல் கும்பாபிஷேகம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் வயலுார் ஊராட்சியில் அமைந்துள்ளது சேமாத்தம்மன் கோவில், மந்தைவெளியம்மன் கோவில், விக்ன விநாயகர் கோவில்.இந்த மூன்று கோவில்களிலும், வரும் 7ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த 27ம் தேதி பந்தக்கால் நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகள் துவங்கி நடந்து வருகிறது. வரும் 6ம் தேதி விக்னேஷ்வர, லட்சுமி, கோமாதா பூஜையும், கணபதி ஹோமமும் நடைபெறும். தொடர்ந்து அம்மன் அழைத்தலும், வாஸ்து சாந்தியும், கும்பலங்காரமும், முதல்கால யாகசாலை பூஜையும் நடைபெறும். வரும் 7ம் தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மூலமந்திர ஹோமமும், மகா பூர்ணாஹூதியும் நடைபெறும். காலை 9:30 மணி முதல் 10:30 மணிக்குள் சேமாத்தம்மன், விக்ன விநாயகர், மந்தைவெளி அம்மன் போன்ற சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து விசேஷ அபிஷேகம் ஆராதனையும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை