கும்மிடிப்பூண்டி -- சென்ட்ரல் கூடுதல் ரயில் இயக்கப்படுமா?
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம், புறநகர் மின்சார ரயில்களின் முனையமாக உள்ளது. இங்கிருந்து, சென்னை சென்ட்ரலுக்கு தினமும் 40 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.சிப்காட் தொழிலாளர்கள், மாணவர்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிக்கு வேலைக்கு செல்வோர், வியாபாரிகள் என, தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.பரபரப்பான காலை நேரத்தில், காலை 8:30 மணிக்கு, கும்மிடிப்பூண்டியில் இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு புறநகர் மின்சார ரயில் இயக்கப்படுகிறது.அதன்பின், 9:55 மணிக்கு இயக்கப்படுகிறது. இடைப்பட்ட, ஒன்றரை மணி நேரத்திற்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்ல புறநகர் மின்சார ரயில் இல்லாததால், அனைத்து தரப்பு பயணியரும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, இடைப்பட்ட நேரத்தில் கூடுதலாக இரு புறநகர் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.