உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரி நகராட்சியில் பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்

பொன்னேரி நகராட்சியில் பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்

பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட, 16வார்டு பகுதியில், குடியிருப்புவாசிகளின் வசதிக்காக உள்ள சுகாதார வளாகம் உரிய பராமரிப்பு இன்றி கிடக்கிறது.கழிப்பறைகள் அழுக்கு படிந்து இருக்கின்றன. குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு நாள்முழுதும் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. கழிப்பறை கதவுகள் சேதம் அடைந்து உள்ளன. செடி, கொடிகள் வளர்ந்து உள்வளாகம் வரை பரவி கிடக்கின்றன. சுகாதார வளாகத்தின் வெளிப்பகுதி முழுதும் குப்பை குவிந்து உள்ளன.பராமரிப்பு இன்றி கிடப்பதால் குடியிருப்புவாசிகளின் உடல்நலம் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. சுகாதார மற்ற நிலையில் இருக்கும், இங்கு குடியிருப்புவாசிகள் செல்வதற்கே தயக்கம் காட்டுகின்றனர்.நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, சுகாதார வளாகத்தை துாய்மைப்படுத்தி அவ்வப்போது பராமரிக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ