உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கியவர் கைது

பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கியவர் கைது

திருத்தணி,: திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 36. இவர், அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை செய்து வந்தார்.இவர், கடந்த மாதம் 23ம் தேதி பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது, நள்ளிரவு 11:30 மணிக்கு ஸ்கூட்டியில் வந்த மூன்று வாலிபர்கள், இலவசமாக பெட்ரோல் போடுமாறு வெங்கடேசனிடம் கேட்டனர்.அதற்கு முடியாது எனக் கூறியதால், மூன்று வாலிபர்களும் வெங்கடேசனை தாக்கி, கத்தியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.பின், மூன்று பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து பெட்ரோல் பங்கில் இருந்த, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து தப்பியோடிய மூன்று பேரை தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்த சங்கீத், 19, என்பவரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய விக்கி என்கிற பிரகாஷ், இளான் என்கிற வெங்கடேசனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி