உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடிநீர் டிராக்டர்களில் மின்ஒயர் திருடியவர் கைது

குடிநீர் டிராக்டர்களில் மின்ஒயர் திருடியவர் கைது

திருத்தணி:திருத்தணி நகரில் திருமண மண்டபம், ேஹாட்டல், டீக்கடை மற்றும் குடியிருப்புகளுக்கு டிராக்டர்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. சில வீடுகள் மற்றும் கடைகளின் மேல் நிலை குடிநீர் தொட்டிக்கு மின்மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்புகின்றனர்.இந்நிலையில் குடிநீர் வழங்கும் டிராக்டர்களில்ள்ள மின்ஒயரை மர்ம நபர்கள் அடிக்கடி திருடிச் சென்று வந்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட டிராக்டர் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில் நேற்று அதிகாலையில் திருத்தணி அரக்கோணம் சாலை, பெட்ரோல் பங்க் நிறுத்தப்பட்டிருந்த குடிநீர் வழங்கும் டிராக்டரில் இருந்து மின்ஒயரை வாலிபர் திருடிக் கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் வாலிபரை கைது செய்தனர். விசாரணையில், மின்ஒயரை திருடியவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கால்வாய் பொட்டல் பகுதி சேர்ந்த செந்தில்குமார், 40 என தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ