உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெருநகர விரிவான போக்குவரத்து திட்டம் திருவள்ளூர் மக்களின் கருத்துரு வரவேற்பு

பெருநகர விரிவான போக்குவரத்து திட்டம் திருவள்ளூர் மக்களின் கருத்துரு வரவேற்பு

திருவள்ளூர்:சென்னை பெருநகர விரிவான போக்குவரத்து திட்டத்திற்கு, திருவள்ளூர் மாவட்ட மக்களின் கருத்து வரவேற்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு சென்னை பெருநகர பகுதிக்கு விரிவான போக்குவரத்து திட்டத்தை தயாரிக்கிறது. இந்த திட்ட பகுதி சென்னை மாவட்டம் மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கியது. திருவள்ளூர் மாவட்டத்தின் 86 சதவீதம் பகுதி இத்திட்ட பகுதியில் இடம்பெறுகிறது.இதன் நோக்கம், சென்னை பெருநகர பகுதியின் போக்குவரத்தை திறம்பட கையாள, அடுத்த 25 ஆண்டுக்கான திட்டம் ஆகும். இது பொதுபோக்குவரத்தை மேம்படுத்துவதிலும், பொதுமக்களுக்கான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதிலும் முக்கியத்துவம் செலுத்தும்.இது சம்பந்தமாக, திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த 15ம் தேதி பொது ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டன.மேலும், வரும் 28ம் தேதிக்குள், gmail.comஎன்ற இ-மெயிலில் விரிவான போக்குவரத்து திட்டத்தை சார்ந்து பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ