உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தையுடன் தாய் மாயம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் தொடுகாடு பகுதியைச் சேர்ந்தவர் அன்பு, 35, மனைவி மணிமேகலை, 32, எட்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் மணிமேகலை குழந்தையுடன் அதே பகுதியில் வசிக்கும் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 9ம் தேதி மகளுடன் மணிமேகலை வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து மணிமேகலை தாய் அளித்த புகாரின்படி மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ