உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சேதமான பள்ளி சுற்றுச்சுவர் சீரமைப்பதில் அலட்சியம்

சேதமான பள்ளி சுற்றுச்சுவர் சீரமைப்பதில் அலட்சியம்

பொன்னேரி:பொன்னேரி அடுத்த தத்தமஞ்சி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், 80 மாணவர்கள் பயில்கின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய 'மிக்ஜாம்' புயல் மழையின்போது, பள்ளியின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது.ஆறு மாதங்கள் ஆன நிலையில், இதுவரை விழுந்த சுவர் சீரமைக்கப்படவில்லை. சுற்று சுவர் சேதம் அடைந்த பகுதிகளில் வழியாக வெளிநபர்கள் இரவு நேரங்களில் உள்ளே சென்று மதுபானங்கள் குடிக்கும் பகுதியாக மாற்றி வருகின்றனர்.கோடை விடுமுறைக்கு பின், வரும், ஜூன், 6ம் தேதி முதல் பள்ளி செயல்பட உள்ளது. இடிந்து விழுந்த சுற்று சுவர் இடிபாடுகளும் அகற்றப்படாமல் உள்ளன.பள்ளியின் அருகே, நீர்நிலை உள்ளதால் மாணவர்கள் விளையாட்டு நேரங்களில் அங்கு செல்லும்போது அசம்பாவிதங்களில் சிக்கும் அபாயம் உள்ளது.பள்ளி மாணவர்கள் நலன்கருதி, புயலின்போது, இடிந்து விழுந்த மேற்கண்ட பள்ளியின் சுற்று சுவரை உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்