மேலும் செய்திகள்
தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகளால் விபத்து அச்சம்
4 minutes ago
மகளிர் குழு கட்டடத்தில் துணை சுகாதார நிலையம்
5 minutes ago
மறுவாழ்வு மையத்தில் வாலிபர் பரிதாப பலி
12 minutes ago
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்டது புதுமாவிலங்கை ஊராட்சி. இங்குள்ள எம்.ஜி.ஆர்.நகரில் 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இப்பகுதிவாசிகளின் பயன்பாட்டிற்காக, திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையோரம், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.இந்த குடிநீர் தொட்டி, 15 ஆண்டுகளாக பராமரிப்பில்லாததால், அதன் நான்கு துாண்களும், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, இடிந்து கீழே விழும் நிலையில் இருந்தது. இது தொடர்பாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 2023 - 24ம் ஆண்டு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், 16.75 லட்சம் மதிப்பில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என, ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
4 minutes ago
5 minutes ago
12 minutes ago