உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தேவதானத்தில் பயனுக்கு வராத கூட்டுறவு சங்க கட்டடம்

தேவதானத்தில் பயனுக்கு வராத கூட்டுறவு சங்க கட்டடம்

பொன்னேரி:பொன்னேரி அடுத்த தேவதானம் கிராமத்தில் செயல்படும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், 3,000க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.இங்கு, நகைக்கடன், விவசாய கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன், சிறுவணிக கடன், தனிநபர் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு வங்கி பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.கடந்த, 1960ல் இருந்து செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, இங்கிருந்த பழமயான கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, வாடிக்கையாளர்களின் வசதிக்காக, 28 லட்சம் ரூபாயில் புதிய கட்டடம் கட்டடப்பட்டது.புதிய கட்டடம் கட்டும் வரை மேற்கண்ட அலுவலகம் தற்காலிகமாக, அருகில் உள்ள உணவு தானிய கிடங்கு கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.கட்டடம், கட்டி முடிக்கப்பட்டு, ஆறுமாதங்கள் ஆன நிலையில் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பூட்டியே கிடக்கிறது.குறுகலான தானிய கிடங்கு கட்டடத்தில் இயங்கும் அலுவலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அலுவலக ஊழியர்களும் இடப்பற்றாக்குறையால் சிரமத்துடன் பணிபுரிகின்றனர்.அலுவலகத்தின் உள்பகுதியில் ஒரே நேரத்தில், இரண்டு வாடிக்கையாளருக்கு மேல் நிற்க அங்கு இடம் இல்லை. வாடிக்கையாளர்கள் மற்றும் மகளிர் குழுவினர், வெளி வளாகத்தில் ஆங்காங்கே தரையில் அமர்ந்திருக்கும் நிலை உள்ளது. கட்டடம் இருந்தும் பயனுக்கு வராதது வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.மேற்கண்ட புதிய கட்டடத்தை பயனுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை