| ADDED : ஜூன் 25, 2024 11:56 PM
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காலை தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை கிராம பகுதி, சமுதாய சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமை வகித்தார். செயலர் கற்பகம், மாவட்ட பொருளாளர் சுதா, மாவட்ட துணை தலைவர்கோமதி ஆகியோர்முன்னிலை வகித்தனர். இதில் 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்று, கிராம சுகாதார செவிலியர்களை துணை சுகாதார நிலையங்களில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். துணை சுகாதார நிலையத்திற்கு இடைநிலை சுகாதாரப் பணியாளர்களை பணி நியமனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பது உட்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். தொடர்ந்து கலெக்டர் பிரபுசங்கரிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.