பழவேற்காடு:சென்னை, மூலக்கடை அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் செந்தில்நாதன், 40. இவர் ஆவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம், விடுமுறை என்பதால், நண்பர்களுடன் பழவேற்காடு பகுதிக்கு வந்தார். பழவேற்காடு அரங்கம்குப்பம் கடற்கரை பகுதியில் மாலை வரை, நண்பர்களுடன் குளித்து விளையாடிக்கொண்டிருந்தார்.மாலை, 6:00மணிக்கு, கடல் அலையில் சிக்கி, நீரில் மூழ்கி மாயமானார். அப்பகுதி மீனவர்கள் உதவியுடன், செந்தில்நாதன் மீட்கப்பட்டு, பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. திருப்பாலைவனம் போலீசார் விசாரிக்கின்றனர். நீரில் மூழ்கி வாலிபர் பலி
மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கரண்சிங், 22. நேற்று முன்தினம் மாலை, நண்பர்களுடன் மீஞ்சூர் அருகில் வெள்ளம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்க சென்றார்.நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்தபோது, கரண்சிங், ஏரி நீரில் மூழ்கி மாயமானார். தகவல் அறிந்த பொன்னேரி தீயணைப்புத்துறையினர் விரைந்தனர்.தீயணைப்பு வீரர்கள் ஏரியில் இறங்கி கரண்சிங்கை தேடினர். இரவு, 8:00 மணிவரை தேடியும் கிடைக்கவில்லை. நேற்று காலை, கரண்சிங் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். மீஞ்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.