உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையோரம் ஓப்பன் கால்வாய் வாகன ஓட்டி, பாதசாரிகள் அச்சம்

சாலையோரம் ஓப்பன் கால்வாய் வாகன ஓட்டி, பாதசாரிகள் அச்சம்

திருவள்ளூர்:சாலையோரத்தில் திறந்தநிலையில் உள்ள கால்வாயால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.திருவள்ளூர் தேரடியில் இருந்து காக்களூர் ஏரிக்கரை கால்வாய் வழியாக, ஆவடி, திருவள்ளூர் பைபாஸ் சாலைக்கு தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் மற்றும் கார், இருசக்கர வாகனங்கள் பயணிக்கின்றன. தேரடி, வீரராகவர் கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், செங்குன்றத்தில் இருந்து திருவள்ளூர் வரும் லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள், ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு அவை, காக்களூர் ஏரிக்கரை சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.இந்நிலையில், ஒரு தியேட்டர் அருகில், திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மூடப்படாததால், அந்த இடத்தில் பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. கனரக வாகனங்கள் வரும் போது, எதிரில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் திறந்து கிடக்கும் கால்வாயினை மூட, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குப்பை எரிப்பு

திருத்தணி - -நாகலாபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் வேலஞ்சேரி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள வேலஞ்சேரி கிராமம் மற்றும் காலனியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை மற்றும் சாலை மற்றும் தெருக்களில் சேரும் குப்பையை துப்புரவு தொழிலாளர்கள் உரக் கிடங்கிற்கு கொண்டு செல்லாமல், நெடுஞ்சாலையோரம் கொட்டுகின்றனர்.மேலும், குப்பை அதிகரிக்கும் போது சாலையோரம் என்று பார்க்காமல், துப்புரவு தொழிலாளர்கள் தீயிட்டு கொளுத்துகின்றனர். நெடுஞ்சாலை முழுதும் புகை மூட்டம் ஏற்படுகிறது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதுடன் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே, மாவட்ட கலெக்டர் சாலையோரம் குப்பை கொட்டி தீவைத்து கொளுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை