உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பச்சவர்ண கோவில் குளம் துார் வாரி சீரமைப்பு

பச்சவர்ண கோவில் குளம் துார் வாரி சீரமைப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அகரம்மேல் கிராமத்தில் பச்ச வர்ண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளக்கரையைச் சுற்றிலும் கங்கையம்மன் கோவில், அய்யப்பன் கோவில் ஆகியவை உள்ளன.இந்த குளத்தில் தேங்கும் மழைநீர், அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த குளம் பராமரிப்பில்லாததால், வீடுகளில் வெளியேறும் கழிவு நீர் குளத்தில் கலந்து விடுகிறது.மேலும், குப்பை கொட்டப்பட்டு, நீர் மாசடைந்து பாசி படர்ந்து காணப்பட்டது. இதுகுறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக ஊராட்சி நிர்வாகம், கோவில் குளத்தை துார் வாரி, பாசியை அகற்றி சுத்தம் செய்தது. இதனால், அப்பகுதிவாசிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ