| ADDED : மே 30, 2024 01:26 AM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், தொழுதாவூரில், ஊராட்சி அலுவலகம், அரசு நடுநிலைப் பள்ளி எதிரே அமைந்துள்ளது. இக்கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.இந்த கட்டடம் மிகவும் பழுதடைந்ததால், மழைக்காலத்தில் நீர்கசிந்தும், இடிந்து விழும் அபாயம் இருந்ததால், பதிவேடுகளை பாதுகாக்க முடியாத நிலை இருந்தது. மேலும், வார்டு உறுப்பினர்கள் கூட்டமும் நடத்த முடிவது இல்லை.இதனால், அதே பகுதியில் அமைந்துள்ள ஊர்ப்புற நுாலக கட்டடத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி, அங்கு ஊராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இதனால், நுாலகத்திற்கு வரும் வாசகர்கள், அங்குள்ள நாளிதழ்கள் மற்றும் புத்தகங்களை படிக்க முடிவது இல்லைஎனவே, புதிய ஊராட்சி அலுவலக கட்டடத்தை விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.