மேலும் செய்திகள்
தேர்வழி ஏரிகளை பாதுகாக்க கலெக்டருக்கு கிராம மக்கள் மனு
3 minutes ago
இன்று இனிதாக ... (18.12.2025) திருவள்ளூர்
4 minutes ago
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
5 minutes ago
சென்னை: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, போக்குவரத்து சிக்னல்களில் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கான நேரத்தை, போக்குவரத்து போலீசார் அதிகரித்து உள்ளனர்.சென்னையில் அதிகரித்து வரும் வாகனங்களுக்கு ஏற்ப, சாலை விரிவாக்கம் செய்யப்படுவதில்லை. மாறாக, நெரிசலை குறைக்க ஆங்காங்கே மேம்பாலங்களும், சுரங்கப்பாலங்களும் அமைத்து வருகின்றனர்.இருப்பினும், 'பீக் ஹவர்'களில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு தீர்வு காணும் விதமாக, போக்குவரத்து மேலாண்மை திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில், 'யு-டர்ன்' முறையில் பிரதான சாலையில் போக்குவரத்தை மாற்றி அமைத்தனர். முழுக்க முழுக்க போக்குவரத்து நெரிசலை மட்டுமே கருத்தில் கொண்டு, மாற்றங்களை செய்த போக்குவரத்து போலீசார், பாதசாரிகள் எப்படி ஒருபுறத்திலிருந்து மற்றொரு புறம் செல்வர் என்பதை மறந்துவிட்டனர்.குறிப்பாக சில இடங்களில், பாதசாரிகள் சாலையைக் கடக்க, 10 வினாடிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.இதனால், சாலையை கடப்போர் ஒரு முறை அனுமதிக்கப்படும் நேரத்தில், சாலையின் மீடியன் வரை சென்று, நெடுநேரம் காத்திருக்கின்றனர்.அடுத்த முறை சிக்னல் திறக்கும் போது தான், சாலையை முழுமையாக கடக்க முடிகிறது.இதுகுறித்து நம் நாளிதழில், புகைப்படத்துடன் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து நேற்று, பாதசாரிகள் எந்தவித அச்சமும் இல்லாமல் சாலையை முழுமையாக கடப்பதற்கு ஏதுவாக, சிக்னல்களில் 10 வினாடியாக இருந்ததை, 22 வினாடிகளாக போலீசார் மாற்றி அமைத்துஉள்ளனர்.
3 minutes ago
4 minutes ago
5 minutes ago