உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவாலங்காடை தாலுகாவாக உயர்த்த மக்கள் எதிர்பார்ப்பு

திருவாலங்காடை தாலுகாவாக உயர்த்த மக்கள் எதிர்பார்ப்பு

திருவாலங்காடு: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா, திருத்தணி, திருவாலங்காடு உள்ளிட்ட இரண்டு ஒன்றியத்தில் உள்ள, 69 ஊராட்சிகளை கொண்டதாக உள்ளது. இதன் நிர்வாக வசதிக்காக திருத்தணி, செருக்கனுார், பூனிமாங்காடு, கனகம்மாசத்திரம், திருவாலங்காடு, மணவூர் என, ஆறு குறுவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆறு குறுவட்டங்களின் முறையே திருத்தணி 21, செருக்கனுார் 15, பூனிமாங்காடு 11, கனகம்மாசத்திரம் 12, திருவாலங்காடு 16, மணவூர் 12 என, 87 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில் திருவாலங்காடு ஒன்றியத்தில், 42 ஊராட்சிகளில் 51 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில் களாம்பாக்கம், சின்னமண்டலி, ஜே.எஸ்.ராமாபுரம், பெரியகளக்காட்டூர், எல்.வி.புரம் உள்ளிட்ட கிராம மக்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான வருவாய், ஜாதி, இருப்பிடம் சான்றிதழ் பெறவும், நிலம் சம்பந்தமான பிரச்னைகளை தீர்த்துக் கொள்வதற்கும், 30 - - 50 கி.மீ., துாரமுள்ள திருத்தணி தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.இதுகுறித்து களாம்பாக்கம் மக்கள் கூறுகையில், களாம்பாக்கத்தில் இருந்து திருத்தணி தாலுகா அலுவலகம், 50 கி.மீ., துார தொலைவில் உள்ளது. சென்னைக்கும், திருத்தணிக்கும் எங்கள் கிராமத்தில் இருந்து ஒரே தொலைவு.எங்கள் கிராமத்தில் இருந்து தாலுகா அலுவலகம் செல்ல போக்குவரத்து வசதி இல்லாததால் தினக்கூலி, விவசாயிகள், பெண்கள், முதியவர்கள் பெரும் சிரமப்படுகிறோம். அவர்கள் ஆட்டோ வாயிலாக ஒருமுறை தாலுகா அலுவலகம் சென்று வர, 300 முதல் 500 ரூபாய் செலவு ஆகிறது.எங்களுக்கு திருவாலங்காடு மையப்பகுதியாக உள்ளது. எனவே திருவாலங்காடை தாலுகாவாக உருவாக்கினால் மக்களின் அலைச்சல் குறைவதுடன், நிர்வாகமும் சீராக இருக்கும். திருவள்ளூர் மாவட்டத்தில் நிர்வாக வசதிக்காக பள்ளிப்பட்டு தாலுகாவை இரண்டாக பிரித்து ஆர்.கே. பேட்டை தாலுகா உருவாக்கியதை போன்று, திருத்தணியை இரண்டாக பிரித்து திருவாலங்காடை தாலுகாவாக உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து திருவாலங்காடு மக்கள் கூறியதாவது:மாவட்டத்தில் வறட்சியான பின்தங்கிய பகுதியாகவே திருவாலங்காடு உள்ளது. திருவாலங்காடை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்கினால் வளர்ச்சி பெறும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது திருவாலங்காடு பகுதி மக்களின் 30 ஆண்டு எதிர்பார்ப்பாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை