உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மக்கள் குறைதீர் கூட்டம் 415 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 415 மனுக்கள் ஏற்பு

திருவள்ளூர்: மக்கள் குறைதீர் கூட்டத்தில் 415 கோரிக்கை மனு பெறப்பட்டது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு கடந்த இரண்டு மாதமாக மக்கள் குறைதீர் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதி விலக்கு அமலுக்கு வந்த நிலையில், முதல் மக்கள் குறைதீர் கூட்டம், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், நிலம் சம்பந்தமாக 84, சமூக பாதுகாப்புதிட்டம் 57, வேலைவாய்ப்பு வேண்டி 38, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் கோரி 61, இதரதுறை 93 என மொத்தம் 415 மனுக்கள் பெறப்பட்டன.மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவியை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஆர்.டி.ஓ.,க்கள் திருவள்ளுர்- கற்பகம், திருத்தணி-தீபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை