உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்கம்பத்தில் வளரும் செடி, கொடிகள் சிறு மழைக்கே மின்சாரம் துண்டிப்பு

மின்கம்பத்தில் வளரும் செடி, கொடிகள் சிறு மழைக்கே மின்சாரம் துண்டிப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் பகுதி மின்கம்பத்தில், செடி, கொடிகள் படர்ந்து வளர்வதால், ஆபத்து நிலவுகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில், மாதம் தோறும் பகுதி வாரியாக மின்வாரியத்தினர், வாரம் ஒரு நாள் மின்தடை செய்து, மின்ஒயர்களை ஒட்டியுள்ள மரக்கிளைகளை அகற்றி வருகின்றனர். அதே சமயம், மின்கம்பங்களை ஒட்டி வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றுவதில்லை.திருவள்ளூர் நகரை ஒட்டியுள்ள, ஊத்துக்கோட்டை சாலையில், ஸ்ரீநிகேதன் பாடசாலை, ஐ.சி.எம்.ஆர்., ஜெ.ஜெ.நகர் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.மழைக்காலத்தில், மின்னல், இடி வரும் வேலையில் இந்த மின்கம்பங்களில் மின்சாரம் தாக்கி, இருளில் மூழ்கடித்து வருகிறது. இதற்கு, மின்வாரிய ஊழியர்களின் அலட்சியமே காரணம் என, பகுதிவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.எனவே, பகுதிவாசிகளுக்கு தொடர்ந்து தடையற்ற மின்சாரம் வழங்க, மின்கம்பங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி