| ADDED : ஆக 20, 2024 09:16 PM
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில், வடசென்னை அனல்மின்நிலையம் நிலை ஒன்று மற்றும் இரண்டு ஆகியவற்றில், ஐந்து அலகுகளில், 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு, 1,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.நேற்று பணிநிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வடசென்னை அனல்மின்நிலைய நுழைவு வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தின்போது, தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்களில், 10ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என, கடந்த, 2021ல் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றவேண்டும். மின்வாரியத்தில் உள்ள, 60,000 காலிபணியிடங்களை நிரப்பவேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும் என வலியுறுத்தினர்.