உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு தொடக்க பள்ளியில் சூரிய நமஸ்கார பயிற்சி

அரசு தொடக்க பள்ளியில் சூரிய நமஸ்கார பயிற்சி

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட விவேகானந்தா நகரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. அங்கு பயிலும் மாணவர்களுக்கு, இலவச சூரிய நமஸ்காரம் பயிற்சி அளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் தென்னரசு தலைமை வகித்தார். கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய நிறுவனர் சந்தியா, பள்ளி மாணவர்கள் 22 பேருக்கு, சூரிய நமஸ்காரம் பயிற்சி வழங்கினார். தொடர்ந்து சூரிய நமஸ்கார பயற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்